சட்டவிரோத கடற்தொழிலை நிறுத்தக்கோரி இன்று (30) முதல் முல்லைத்தீவு மீனவர்கள் தொடர் கவனயீராப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்துக்கு முன்பாக
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களால் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நாளை (31) கடற்தொழில் அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்
மேற்கொள்ளும் நிலையில் சட்டவிரோத மீன்பிடி முறைகளுக்கு
தடைவிதிக்கக்கோரி போராட்டம் நடைபெறும் அதேவேளை குறித்த
போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
தானும் மீனவன் என மீனவர்கள் சார்பாக குறித்த போராட்டத்தில்
கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போராட்ட இடத்திற்கு வருகைதந்த தேசிய மக்கள் சக்தியின்
அமைப்பாளர் போராட்ட கோரிக்கைகளுக்கு அமைச்சர் ஊடாக தீர்வினை
பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

