Thursday, April 16, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொலையில் முடிந்த ஐந்துவருட பகை: இருவர் படுகாயம்

கொலையில் முடிந்த ஐந்துவருட பகை: இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில்
நேற்று இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தொல்புரம்,  கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த
27 வயதுடைய குகதீஸ்வரன் மயூரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சபேஷ்வரன் ரஜீவன் மற்றும் கமலநாதன் பானுஷன் ஆகிய
இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றுரவு கொட்டடியம்பதி ஆதி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் புனரமைப்பு
பணிகள் இடம்பெற்றன. அந்த இடத்திற்கு மூன்று நண்பர்களுடன் வந்த
சந்தேகநபர் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேகநபரின் தாக்குதலுக்கு உள்ளாகி பானுஷன் என்ற
இளைஞர் படுகாயமடைந்தார்.

அதன்பின்னர் சந்தேகநபர் தப்பி செல்ல முயன்றபோது கொலை செய்யப்பட்ட
மயூரன்,  சந்தேகநபரை பிடிப்பதற்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது சந்தேகநபர் மயூரன் மீதும் அதே கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
மேற்கொண்டுள்ளார். இதன்போது மயூரன் சம்பவ இடத்திலேயே விழுந்து
உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் தனக்கும் காயம் இருப்பதாக கூறி முறைப்பாடு செய்வதற்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

கொலை இடம்பெற்றமை தெரியாத பொலிஸார்இ குறித்த நபரை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்பின்னர் கொலை இடம்பெற்றமை தெரியவந்த நிலையில் சந்தேகநபரை
வைத்தியசாலையில் வைத்து கைது செய்துள்ளனர்இ பொலிஸ் கண்காணிப்பில்
அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை பானுஷனும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில்
வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர் உட்பட இருவரை பொலிஸார்
கைது செய்தனர்.

ஒரே ஊரை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு
முதல் முரண்பாடு காணப்பட்டமையே இச் சம்பவத்திற்கு காரணம் என
முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments