Sunday, May 3, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழில் மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழில்,  கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்தவர்
இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறை வீதி,  நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். இதன்போது வீதியால் சென்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை
அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments