Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி: மன்னாரில் சம்பவம்

கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி: மன்னாரில் சம்பவம்

மன்னார்,  மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை
கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில்
போட்டு மலசலகூட குழியினுள் போட்ட நிலையில்,  குறித்த சடலம் நேற்று
(04) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது

மன்னார்,  மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த 02 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை கடந்த 03 ஆம் திகதி துண்டு துண்டுகளாக வெட்டி உரைப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்
சரணடைந்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப்படுத்தியதோடு கொலையை செய்த குறித்த பெண்ணையும் அழைத்து வந்தனர். பின்னர் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்த நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து எடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடையவர்
என தெரிய வருகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments