Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாதமிழகம்கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கிறார் விஜய்

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கிறார் விஜய்

ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய்
நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ், சிபிஐ,  சிபிஎம் எம்எல்ஏக்கள் 9 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த
நிலையில் இன்னும் 2 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. தவெகவுக்கு
எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள்
தெரிவித்துள்ளன. இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவு
கடிதத்தை தவெகவின் நிர்மல்குமார் நேரில் பெற்றுக்கொண்டார்.

மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளித்து தவெக ஆட்சியமைக்க
வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று நன்றி
தெரிவிக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கும் விஜய் சென்று நன்றி தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments