மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என
முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்த பாரதிராஜா,
சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே
சிகிச்சை பெற்று நிலையில், சிகிச்சைப் பலனின்றி இயக்குநர் பாரதிராஜா சென்னை
நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று (10) அதிகாலை காலமானார்.
திரையுலகப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும்
பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்து அவரது வீட்டில் குவிந்து
வருகின்றனர்.
சென்னை நீலாங்கரையில் பாரதிராஜாவின் வீட்டுக்கு இன்று காலை நேரில்
சென்ற முதல்வர் விஜய், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர்
விஜய் அறிவித்துள்ளார்.

