பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படுகிறது.
”ஆசிரியர்கள்இ, அதிபர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உடனடியாகத்
தீர்க்கப்பட வேண்டும்”, ”ஆசிரியர்கள், அதிபர்களின் பிரச்சினைகளை
அரசாங்கம் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது…”, ”ஒரு இலட்சம் ஆசிரியர்
பதவி உயர்வுகள் முடக்கப்பட்டுள்ளன…”, ”சம்பள வேறுபாடுகளை நீக்குங்கள்…”
போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை முதல்
கல்வி அமைச்சின் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள், பிரதமருக்கும்
அதிகாரிகளுக்கும் இடையே எவ்வளவு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும்,
அவை பேச்சுவார்த்தைகளோடு நின்றுவிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிலை தொடருமாக இருந்தால், கல்வி அமைச்சுக்கு அருகில் இன்று தொடங்கியுள்ள இந்தப் போராட்டம், எதிர்காலத்தில் ஒரு பெரிய போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

