Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவிஜய்க்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா ஒரு பைத்தியக்காரன்: தேரர் எச்சரிக்கை

விஜய்க்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா ஒரு பைத்தியக்காரன்: தேரர் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தை ஆளுவதற்கு தமிழக நடிகர் விஜயை,  நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அழைப்பதானது சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் செயல் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முப்பது வருட கால யுத்தத்தில் முப்படைகளும் உயிரைப் பணையம் வைத்தே
வடக்கை மீட்டெடுத்தன. அந்த இருண்ட காலத்தை மீண்டும் உருவாக்க
முற்பட வேண்டாம். சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கினால் எவரும்
தப்ப முடியாது.

பாராளுமன்றத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா ஒரு பைத்தியக்காரன்.
இதே கருத்துகளை அவர் வெளியில் பேசியிருந்தால் வீதியில் கூட
நடமாட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி விஜய்! எங்கள் நாட்டை நோக்கி விரல் நீட்ட வேண்டாம். நீங்கள்
தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான்; முழு இந்தியாவின் தலைவரோ பிரதமரோ
அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  ‘இலங்கையின் உள்நாட்டுச் செயல்பாடுகளில் தலையிட முயன்றால்
சிங்கள,  தமிழ். முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தக்க பதிலடி
கொடுப்போம்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments