செம்மணி, சிந்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள் இன்று (07) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது புதிதாக 3 மனித எலும்பு எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு,
2 மனித எலும்பு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 256 மனித
எலும்பு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 260 மனித எலும்பு எச்சங்கள்
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் போது 17 மனித எலும்பு எச்சங்கள்
முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.

