Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாதமிழகம்தவெகவுக்கு ,விடுதலை சிறுத்தைகள் ஆதரவு

தவெகவுக்கு ,விடுதலை சிறுத்தைகள் ஆதரவு

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி
ஆதரவை வெளியிட்டுள்ளது.

இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக ஆளுநரை
சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் விஜய். இதற்கிடையில்
இன்று இரவு ஆளுநர் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 107 தவெக உறுப்பினர்களுடன் 5 காங்கிரஸ்
உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரிகள் தலா இரண்டு கட்சிகள் என
116 உறுப்பினர்களுடன் தவெக கடந்த ஒரு சில நாள்களாக ஆட்சியமைக்கத்
தேவையான பெரும்பான்மை என்ற 118 பலத்தைப் பெற போராடி வந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் இன்று மாலை தன்னுடைய நிபந்தனையற்ற ஆதரவை அளித்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments