Monday, May 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைடிக்கோயா இரட்டைக் கொலை : தம்பதியினரின் பூதவுடல்கள் நல்லடக்கம்

டிக்கோயா இரட்டைக் கொலை : தம்பதியினரின் பூதவுடல்கள் நல்லடக்கம்

டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் இறுதிச்சடங்குகள் இன்று (24) தரவளை பொது மயானத்தில் நடைபெற்றுள்ளன.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவ பகுதியில் பதுங்கியிருந்தபோது பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று (23) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக
சந்தேகிக்கப்படும் குறித்த நபர்இ தனது மனைவியின் சகோதரரின் வீட்டில்
மறைந்திருந்த நிலையில் பிடிபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன்,  அவரையும் அவரது மனைவியையும் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments