புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட
மரண தண்டனை கைதி ஒருவர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள்
தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.
பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற இந்த கைதி, சிறைச்சாலைக்குள்ளேயே இன்று காலை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
குறித்த குற்றவாளிகளுக்கு ஏற்கனவே யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில்
மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட
தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்யுமாறு கொழும்பு நீதிமன்றத்தில்
மேன்முறையீடு செய்திருந்தனர்.
அதன்பின்னர் கொழும்பு நீதிமன்றமும் அந்த தீர்ப்பினை உறுதி செய்தது. அந்த
தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில்
இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதன்படி நேற்றையதினம் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு
கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில் குறித்த கைதி இன்று அதிகாலை
உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

