Sunday, May 31, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கை இராணுவத்திற்கு புதிய பதவி நிலை பிரதானி நியமிப்பு

இலங்கை இராணுவத்திற்கு புதிய பதவி நிலை பிரதானி நியமிப்பு

இலங்கை இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக , மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாகப் பொறுப்பேற்கும்
இவருக்கான புதிய நியமனமானது,  நேற்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில்
வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தில் மிக நீண்ட மற்றும் திறமையான சேவைக் காலத்தைக்
கொண்ட மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்னஇ இராணுவத்தின் புகழ்பெற்ற
இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியான ‘பதவி நிலை பிரதானி’
பொறுப்பிற்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக,  அவர் இராணுவத்தின்
பல்வேறு முக்கிய கட்டளைப் பதவிகளையும்இ திணைக்களப் பொறுப்புகளையும்
திறம்பட வகித்துள்ளார். மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன,  நாட்டின்
தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்துவதில்
புதிய உத்திகளுடன் தனது கடமைகளைத் தொடர்வார் என
எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments