Monday, June 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉலகச் சந்தை விலை அதிகரிப்பாலேயே எரிபொருள் விலை அதிகரிப்பு

உலகச் சந்தை விலை அதிகரிப்பாலேயே எரிபொருள் விலை அதிகரிப்பு

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு மற்றும் சர்வதேச ரீதியிலான
சவால்களின் காரணமாகவே உள்நாட்டில் தற்காலிகமாக எரிபொருள் விலைகளில்
திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக
நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

ஒரு நாட்டை ஆட்சி செய்யும்போது இயற்கை பேரிடர்கள்,  பொருளாதார
வீழ்ச்சிகள் மற்றும் கடந்த கால ஆட்சியாளர்களின் தவறான முடிவுகள் போன்ற
உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என
சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக,  2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார
நெருக்கடியின் போது,  ஆட்சியாளர்களின் முறையற்ற நிர்வாகத்தால்
பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானதை நினைவு கூர்ந்த அவர்,
தற்போதைய அரசு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
பில்லியன் கணக்கில் இழப்பீடுகளை வழங்கி,  அவர்களின் வாழ்வாதாரத்தை
மீளக் கட்டியெழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தற்போது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை மாற்றமானது உள்நாட்டு
நிர்வாகத் தவறு அல்ல,  மாறாக அது முற்றிலும் சர்வதேச காரணிகளால்
உருவானது என்று அவர் வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய
எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்ட
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் உலக அளவில் எண்ணெய்
விலையுயர்வுக்கு வழிவகுத்துள்ளன.

இந்த சர்வதேச யுத்த சூழலானது இலங்கை போன்ற நாடுகளை மட்டுமன்றி
இந்தியா,  வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் போன்ற வலுவான பொருளாதாரத்தைக்
கொண்ட நாடுகளையும் கூட பாதித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் பெரும் பங்கைக் கொண்ட இந்தியாவே கடந்த சில
வாரங்களில் நான்கு முறை எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய
கட்டாயத்திற்கு ஆளானதுடன்,  இந்திய ரூபாயின் மதிப்பிலும் ஏற்ற இறக்கங்கள்
ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

விலை அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும்,  அரசாங்கம் இன்னும் மக்களுக்கு
பெருமளவு மானியங்களை வழங்கி வருவதாக அசித நிரோஷன தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments