வெல்லம்பிட்டி நகரில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இன்று (21) மாலை தீப்பவரல்
ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலானது இன்று மாலை 4.45 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இத் தீப்பரவலைக் கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு
வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.இச்சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்

