Wednesday, July 8, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்பிரான்ஸ் ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டுவெடிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டுவெடிப்பு

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன்
தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம்
நிகழ்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் ஜனாதிபதி அகமது அல்-ஷாரா தலைமையிலான கிளர்ச்சியாளர்கள்,
பஷர் அல்-அசாத்தின் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய பிறகு, அங்கு செல்லும்
முதல் ஐரோப்பிய தலைவர் என்ற பெருமையுடன் பிரான்ஸ் ஜனாதிபதி
இம்மானுவேல் மேக்ரோன் நேற்று டமாஸ்கஸ் சென்றடைந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி மேக்ரோன் தங்கியிருக்கவிருந்த ஹோட்டல் வளாகத்திற்கு அருகிலேயே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகவும், அப்பகுதி
முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதாகவும் உள்ளூர்வாசிகள்
தெரிவித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்துஇ பாதுகாப்பு காரணங்களுக்காக
டமாஸ்கஸின் முக்கிய வீதிகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டுள்ளன.

அப்பகுதியில் கூடுதல் இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புப் படையினர்
குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த முழுமையான
விபரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments