Monday, July 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கையின் வயது முதிர்ந்த பெண் காலமானார்

இலங்கையின் வயது முதிர்ந்த பெண் காலமானார்

இலங்கையின் மிக வயது முதிர்ந்த பெண்களில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்ட அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்த பஞ்சகே கலுமெனிகே,  தனது 114ஆவது வயதில் காலமானார்.

1912ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி பிறந்த அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.

அதன் பின்னர் கீழே விழுந்து காயமடைந்த கலுமெனிகே,  அறுவை சிகிச்சை
மேற்கொண்டார். சிகிச்சைக்குப் பிறகு சுமார் இரண்டு மாதங்கள் உயிர் வாழ்ந்த
நிலையில்,  பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலுமெனிகே,  12 பிள்ளைகள் மற்றும் 325 கொள்ளுப்பேரக்குழந்தைகளை
உள்ளடக்கிய பெரிய குடும்பப் பரம்பரையை விட்டுச் சென்றுள்ளாரென்பதும்
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments