நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜயலத் பண்டார திஸாநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
58 வயதுடைய சந்தேகநபரை தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், 50, 000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். அத்துடன்இ அவர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜயலத் பண்டார திஸாநாயக்க,
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று (14) ஹங்குரன்கெத்த பகுதியில்
வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
மதுபான உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, வீரகெட்டியவைச் சேர்ந்த நபர்
ஒருவரிடம் 27.5 மில்லியன் ரூபாயைப் பெற்று மோசடி செய்ததாக மத்திய
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே
அவர் கைது செய்யப்பட்டார்.

