Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாபுலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்துவோம்- பிரித்தானிய பிரதமர்

புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்துவோம்- பிரித்தானிய பிரதமர்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்றால்இ புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்துவோம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வாக்குறுதியளித்துள்ளார்.

பிரித்தானியாவில்,  எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி,  அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில்,  லேபர் கட்சி ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில்,  மக்கள் கவனத்தை ஈர்க்க பிரதமர் ரிஷி தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

பிரித்தானிய அரசியல் வட்டாரத்தில் தற்போது முக்கிய பேசுபொருளாகவுள்ள புலம்பெயர்தல் குறித்து அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதாவதுஇ தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,  புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுப்போம் என்று புதிய வாக்குறுதியொன்றை அளித்துள்ளார். அதன்படி, ஆண்டொன்றுக்கு எத்தனை பேருக்கு பணி விசாக்களும்,
குடும்ப விசாக்களும் வழங்கப்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments