Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாபிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் நரேந்திர மோடி

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் நரேந்திர மோடி

இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இவற்றில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே, மத்தியில் அக்கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளது.

இதனையடுத்து,  மக்களவையைக் கலைத்து புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. இதற்கமைய,  மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி எதிர்வரும் 8 ஆம் திகதி பதவியேற்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இதன்பொருட்டு, பிரதமர் பதவியை நரேந்திர மோடி இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி திரௌபதி முர்முவைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளார். அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி,  காபந்து பிரதமராக தொடரும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments