Monday, August 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசட்டவிரோத மதுபானதுடன் இருவர் கைது

சட்டவிரோத மதுபானதுடன் இருவர் கைது

வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி
இடம்பெற்று வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்
அடிப்படையில்,  குறித்த பகுதியை பொலிஸார் இன்றைய தினம்
முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கிருந்த நபர்கள் தப்பியோடிய நிலையில்,  இருவரை பொலிஸார்
மடக்கி பிடித்துள்ளனர்.

20 லீட்டர் சட்டவிரோத மதுபானமும்,  540 லீட்டர் கோடா,  சட்டவிரோத மதுபான
உற்பத்தி உபகரணங்கள்இ மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார்
மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும் நெல்லியடி
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளதுடன் தப்பியோடிய ஏனையவர்களை கைது செய்ய
நடவடிக்கை எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments