காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில்
மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை தமிழக முதல்வர்
ஜோசப் விஜய் இன்று (01) திறந்து வைத்தார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய், என். ஆனந்த் உள்ளிட்ட தனது அமைச்சரவை
சகாக்கள் முன்னிலையில், வான் கதவுகளை திறப்பதற்கான பொத்தானை
இயக்கி, வெளியேறிய காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி நீர்திறப்பைத்
தொடங்கி வைத்தார்.

