முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி சினாரி லக்மந்தி ஹெட்டியாராச்சி இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு இலக்கம் 11 மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக, நீதிபதியை கொண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையைப் பெற்றுத் தருமாறு நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 50, 000 ரூபாய் இலஞ்சத்தை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

