Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைரயில் விபத்து: இருவர் பலி

ரயில் விபத்து: இருவர் பலி

வத்தளை – எந்தேரமுல்ல ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற
விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

எந்தேரமுல்லயில் இருந்து வத்தளை நோக்கி பயணித்த கார்,  சமிக்ஞை
விளக்குகளை மீறி கடவையை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த ரயிலுடன்
மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காரில் பயணித்த பியகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரும் கொழும்பில் தனியார் துறையில் பணிபுரிந்து வந்த 34 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொட்ரபில் மேலதிக விசாரணைகளை எந்தேரமுல்ல பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments