மன்னார், சௌத்பார் உப்பு நீரேரி பகுதியில் வெடி மருந்துகளை பயன்படுத்தி
மீன் பிடித்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கடந்த 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல்
நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகொன்று சோதனைக்கு
உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, வெடி மருந்துகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 300 கிலோகிராம் மீன்கள் மற்றும் குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும், படகு மற்றும் மீன் தொகையும் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர்
அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

