Thursday, October 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் 187.56 ஏக்கர் காணி படையினரால் விடுவிப்பு

யாழில் 187.56 ஏக்கர் காணி படையினரால் விடுவிப்பு

காங்கேசன்துறை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் பலாலி பாதுகாப்புப்
படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல்
WMAM  நிசங்கவினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் ‘
பிரதீபனிடம் நேற்று (30) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில்
வைத்து கையளிக்கப்பட்டது.

காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயத்திற்கு அரச காணி 351.23
ஏக்கர் வழங்குவதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் ஒதுக்கப்பட்டு,
அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு முதலீட்டு வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 351.23 ஏக்கர் பரப்பிற்குள்,  நேற்று உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்ட 187.56 ஏக்கர் காணியும்
உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments