வாகன விபத்துத் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின்
பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு ஹோமாகம நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற வாகன விபத்துத் தொடர்பில்
அவர் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்

