Friday, October 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ

மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ
, இன்று (9) முற்பகல் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்து
வரப்பட்டு,  மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு
அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமை காரணமாக இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளால் கண் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

நேற்று (8) அவர் சிறைச்சாலை விசேட மருத்துவரிடம் காண்பிக்கப்பட்ட போது
வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனைகளுக்கு அமைய, தேசிய கண் வைத்தியசாலையின் விசேட மருத்துவரிடம் காண்பிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய,  இன்று காலை தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட
முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ,  பரிசோதனைகள்
நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால்
அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments