சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைஇ இன்று (9) பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோகனதீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிரான 50 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இதில்
எதிர்க்கட்சியைச் சேர்ந்த 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
பாராளுமன்ற வழிமுறைகளைக் கையாளும்போது சபாநாயகர் பின்பற்றிய
ஒருபக்கச்சார்பான மற்றும் ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடுகள்
காரணமாக, அவர் அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் எனக் குற்றஞ்சாட்டியே
எதிர்க்கட்சியினரால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை
கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சியின் பிரதிப் பிரதம கொறடா அஜித் பி. பெரேரா,
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திலீப் வெதாரச்சி, சமிந்த விஜேசிறி மற்றும் வருண லியனகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

