Friday, October 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅமைதிப் பரிசு வென்றார் நவநீதம் பிள்ளை

அமைதிப் பரிசு வென்றார் நவநீதம் பிள்ளை

2026ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு,  மனித உரிமைகள்
மற்றும் சர்வதேச சட்ட மேம்பாட்டிற்காகத் உலகளவில் பங்காற்றிய தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி சட்ட நிபுணரான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே நாட்டின் நோபல் கமிட்டி இவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு
உத்தியோகபூர்வமாகத் தேர்வு செய்து இன்று (09) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் நோபல் அமைதிப் பரிசு பெறும் முதல் தமிழ் பெண்மணி என்ற
வரலாற்று பெருமையை இவர் பெற்றுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் சர்வதேசச் சட்ட மேம்பாட்டிற்கான விருது

உலகளவில் அமைதியை நிலைநாட்டவும்இ சர்வதேச சட்டங்களின் ஆட்சியை
உறுதிப்படுத்தவும்,  பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளைப்
பாதுகாக்கவும் நவநீதம் பிள்ளை ஆற்றிய ஈடிணையற்ற சேவைகளைப் பாராட்டி
இந்த விருது வழங்கப்படுவதாக நோர்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில நிறவெறிக்கு எதிரான போராட்டம் முதல் சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டது வரை,  மனித உரிமைப்
பாதுகாப்பில் இவரது பங்களிப்பு சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments