நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல்
எரிவாயு சிலிண்டரின் விலை 4, 365 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை
செய்யப்படவுள்ளது.
5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 1, 750 ரூபாவாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர்
815 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

