Tuesday, November 3, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்

நிலையான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக,  ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ
நிதியுதவி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி
வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் ஊடாக,
பசுமை மாற்ற முயற்சிகள் மற்றும் காலநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய
வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கைக்கும் ஐரோப்பி,
ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்த
எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன்,  வர்த்தகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஆற்றலை
மேம்படுத்துவதற்கும்,  ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் வர்த்தக வாய்ப்புகளைப்
பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சர்வதேச தரநிலைகளுக்கு இணங்குவதற்கு
ஆதரவளிப்பதற்கும் இந்தத் திட்டம் கவனம் செலுத்தவுள்ளது.

இந்த நான்கு ஆண்டு திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை
வர்த்தகம்,  வணிகம்,  உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
மேற்பார்வை செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments