தெனியாய பகுதியில் ஆற்றில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன
நான்கு இளைஞர்களில் இருவரின் சடலங்கள் இதுவரை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (07) இடம்பெற்ற இந்த விபத்தில் காணாமல் போன ஏனைய இருவரையும்
தேடும் பணிகளை கடற்படையினரும் பொலிஸாரும் பிரதேசவாசிகளின்
உதவியுடன் முன்னெடுத்திருந்தனர்.
தெனியாய, பெவரலிய பகுதியிலுள்ள கேலேதொல என்ற இடத்திற்கு நீராடச் சென்ற
நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் நேற்று பிற்பகல்
நடந்துள்ளது.
சுற்றுலாப் பயணமாக அங்கு வருகை தந்த கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார்
கணினி நிறுவனமொன்றில் பணிபுரியும் 7 இளைஞர்களில் 6 பேர் குறித்த இடத்தில்
நீராடுவதற்காகச் சென்றிருந்த நிலையில், அவர்களில் நால்வரே இவ்வாறு
காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போனவர்களைத் தேடி கடற்படையினரும் பொலிஸாரும் நேற்று பிற்பகல் ஆரம்பித்த தேடுதல் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன்போதே இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டள்ளன.

