நாட்டில் சீமெந்து உற்பத்தியை மேற்கொள்ளும் பல சீமெந்து நிறுவனங்கள்,
50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாவால்
அதிகரித்துள்ளன.
உற்பத்திச் செலவு வேகமாக அதிகரிப்பதே இந்த விலை அதிகரிப்புக்கான
முக்கிய காரணம் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தத் தீர்மானத்துடன், இதற்கு முன்னர் 2, 100 ரூபா முதல் 2, 250 ரூபா வரை
காணப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து மூட்டையொன்றின் சில்லறை விலை
, 2,200 ரூபா முதல் 2, 350 ரூபா வரையிலான புதிய விலைக்கு விற்கப்படும்.

