சீரற்ற காலநிலையால் மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துச் செல்வதால்
இன்று (08) அதன் இரு தானியங்கி வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 1:16 மணி நிலவரப்படி கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கு அமைய,
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 438.04 மீற்றர் வரை
உயர்ந்துள்ளது.
இதற்கமைய நீர்த்தேக்கத்தின் முதலாவது வான் கதவு 0.702 மீற்றராலும்,
இரண்டாவது வான் கதவு 0.705 மீற்றராலும் திறக்கப்பட்டுள்ளடன், அதனூடாக
வினாடிக்கு 159 கன மீற்றர் (159 m³/sec)) நீர் மகாவலி கங்கைக்கு திறந்து
விடப்பட்டு வருகின்றது.
இதன்படி, மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள்
அவதானத்துடன் இருக்குமாறும், ஆற்றில் இறங்குவதையோ அல்லது
ஆற்றைப் பயன்படுத்துவதையோ தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களிடம்
கேட்டுக்கொள்கின்றனர்.

