அநுராதபுர புனித பூமியில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலாங்கொடை கஸ்ஸப தேரருடன் இருந்த ஒருவர் ஹெரோயின் மற்றும்
கஞ்சா பயன்படுத்தியிருப்பது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலாங்கொடை கஸ்ஸப தேரருடன்
இருந்தபோது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின்
பேரில் கைது செய்யப்பட்டவரே ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்தியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பலதுர ரங்கிரியலாகே பிரசாத் சுசந்த ஜயசிறி
அல்லது ‘தஹம் பிரசாத்’என்பவராவார்.
கடந்த நாட்களில் அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய விகாரைக்கு அருகில்
பொலிஸாருக்கும் தேரர்களுக்கிடையில் ஏற்பட்ட பதற்றமான சம்பவம்
தொடர்பாக இரு பொது மக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அநுராதபுரம் புனித நகர திட்டமிடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களையும்
அதற்கு ஆதரவு தெரிவித்த பொது மக்களையும் அந்த இடத்தில் இருந்து அகற்ற
பொலிஸார் முயற்சித்த போதே இந்த பதற்றமான சூழ்நிலை உருவானதுடன்,
பின்னர் அது மோதலாக வலுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

