Monday, November 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபருத்தித்துறையில் கோர விபத்து

பருத்தித்துறையில் கோர விபத்து

பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு மோட்டார்
சைக்கிள்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன்
படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை – தும்பளை வீதியில் மணியாரம் சந்திக்கு அருகாமையில் நேற்று
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.

இதன்போது,  பருத்தித்துறையிலிருந்து தும்பளை நோக்கிப் பயணித்த
முச்சக்கரவண்டியும்,  பருத்தித்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும்
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் வீதியில் தூக்கி
வீசப்பட்ட நிலையில்,  பின்னால் மிக நெருக்கமாகப் பயணித்த ஏனைய மூன்று
மோட்டார் சைக்கிள்களும் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பத்தினர்
காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 4 வயது சிறுவனுக்குப் பலத்த காயமேற்பட்டுள்ளமையுடன்,  அவரது தாய்,  தந்தையரும் காயங்களுக்குள்ளான
நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரவெட்டி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் மற்றும் அவரது
மனைவி,  பிள்ளை ஆகியோரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அருகருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பயணித்த நிலையில்,  அவற்றை
முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளது. மிக நெருக்கமாக நான்கு மோட்டார் சைக்கிள்கள்
வீதியை ஆக்கிரமித்துப் பயணித்தமையும்,  அதிக ஒளிர்திறன் கொண்ட முகப்பு
விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணித்தமையுமே விபத்துக்குக் காரணம் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை
பொலிஸார்,  விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதியைப் பொலிஸ்
நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments