Sunday, November 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் மதுபோதையில் டிப்பர் சாரதி செய்த செயல்

யாழில் மதுபோதையில் டிப்பர் சாரதி செய்த செயல்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி,  மதுபோதையில் டிப்பர்
வாகனத்தைச் செலுத்திய சாரதியால் சுமார் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள்
சேதமாக்கப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததால் அப்பகுதிக்கான தொலைத்தொடர்பு சேவைகள் தடைப்பட்டுள்ளதுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் வீதிகளில் மணலைக் கொட்டிச்சென்றுள்ளமையால் வீதிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் பொலிஸார் இன்று (29) அதிகாலை வீதிச் சோதனை நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த போதுஇ கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் சந்தேகத்திற்கு
இடமான முறையில் பயணித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறித்துள்ளனர்.
எனினும்,  பொலிஸாரின் கட்டளையை மீறி சாரதி வாகனத்தை நிறுத்தாமல்
தப்பியோடியுள்ளார்.

பொலிஸார் டிப்பர் வாகனத்தைத் துரத்திச் சென்றவேளை,  சாரதி வாகனத்திலிருந்த மணலை வீதியில் கொட்டியவாறு தப்பியோட முயன்றுள்ளார்.

இதன்போது டிப்பர் வாகனம் தொலைத்தொடர்பு கம்பமொன்றுடன் மோதியதில்,
அதன் கம்பிகள் (வயர்கள்) வாகனத்தில் சிக்கிக்கொண்டன. அதனைக்
கவனிக்காமல் வாகனத்தைத் தொடர்ந்து செலுத்தியமையால், சுமார் 10
தொலைத்தொடர்பு கம்பங்கள் முறிந்து சேதமாகியுள்ளன.

இதனையடுத்து,  தப்பியோடிய டிப்பர் வாகனத்தை மடக்கிப் பிடித்த பொலிஸார்,
பளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சாரதியையும் உதவியாளரையும்
கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து
முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில்இ அவர் மதுபோதையில் இருந்தமை
உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை. இச்சம்பவத்தில் சேதமடைந்த கம்பங்களை மாற்றி,
தொலைத்தொடர்பு சேவைகளை மீள வழங்குவதற்கான புனரமைப்புப் பணிகளில்
ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments