Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகாத்தான்குடியில் துப்பாக்கிச்சூடு

காத்தான்குடியில் துப்பாக்கிச்சூடு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று
இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் வீதியில் இன்று முற்பகல் வீடு ஒன்றிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்ணின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கியுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தீக் சிபானியா  என்பவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதுடன் இப் பெண்ணின்
கணவர் அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும் அவர் ஒரு மௌலவி எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி பொலிஸார் குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.வி கமராக்களையும் சோதனை செய்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து துப்பாக்கி ரவைகளையும் மீட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments