Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சி நெத்தலியாற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

கிளிநொச்சி நெத்தலியாற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

கிளிநொச்சிஇ தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படும் நிலையில்,  இது கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மரணம் தொடர்பாக நீதவான் விசாரணைகளின் பின்னர்,  குறித்த சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும்,  தர்மபுரம் பொலிஸார் இது தொடர்பான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments