Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாத கால விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து பாதாள குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றுமாறு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதாள உலகக் குழுவினரை ஒடுக்குவதற்கு அவர்களிடமுள்ள துப்பாக்கிகள் பாரிய தடையாக உள்ளமையினால் முப்படையினரின் ஆதரவுடன்,  அவர்களிடம் உள்ள துப்பாக்கிகளை கைப்பற்றுமாறும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும்,  நாட்டில் தொடர்ந்தும் யுக்திய நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் யுக்திய நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களுக்குள் 5, 000 போதைப்பொருள் வியாபாரிகள் யுக்திய நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments