பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர்
பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் அடுத்த
பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.
அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தொழில் கட்சியின்
ஆட்சி இடம்பெறவுள்ளது.
இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
அதாவது, பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு படு தோல்வியையே
கன்சர்வேடிவ் கட்சி சந்தித்துள்ளது.
இதேவேளையில், தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன்
வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரித்தானியவின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர்
பதிவியேற்கவுள்ளார்

