Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாஇந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர்
கெயிர் ஸ்டார்மருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ள இந்திய
பிரதமர் நரேந்திர மோடி,

பிரித்தானிய பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற கெயிர் ஸ்டார்மருக்கு தான்
மனமார்த்த பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

அத்துடன், பரஸ்பர வளர்ச்சியையும், இந்தியா – பிரித்தானியா இடையேயான அனைத்து துறைகளிலும் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை பலப்படுத்த ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரிஷி சுனக்கிற்கும் தனது வாழ்த்தை பகிர்ந்துள்ள இந்திய பிரதமர்,

சிறந்த தலைமை பண்புக்காகவும்,  தனது பதவிக்காலத்தில் இந்தியா பிரிட்டன் இடையிலான உறவை பலப்படுத்த ஆற்றிய பணிக்காகவும் ரிஷி சுனக்கிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்இ ரிஷி சுனக்கின் சிறந்த எதிர்காலத்திற்காக தான் வாழ்த்துவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments