வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று மாலை இடம்பெற்றது.
மூன்று தேர்களில் முதலில் விநாயகர் வலம்வர நடுவிலே சிவன் வலம்வர மூன்றாவது தேரில் முருகப்பெருமான் தேரேறி வலம் வந்தார்.
தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்டதுடன் பறவைக்காவடி, பால்காவடி, அங்கப்பிரதட்டை, அடிஅழித்தல், கற்பூரச்சட்டி. பாற்செம்பு எடுத்தல் போன்ற நிவர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர்.
இங்கு மகோற்சவம் ஆனிமாதத்தில் வருகின்ற அமாவாசையோடு ஆரம்பித்து பதினாறு நாட்களுக்கு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

