மறைந்த சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவரும் புதிய சம சமாஜ கட்சியின் முன்னாள் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை (27) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
உடல் நலக்குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (25) அதிகாலை தனது 81ஆவது வயதில் விக்ரமபாகு கருணாரத்ன காலமானார்.
அதை தொடர்ந்துஇ இன்று (26) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையும்இ நாளை (27) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் அன்னாரின் பூதவுடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கொழும்பு பொரளையில் அமைந்துள்ள ஏ.எப்.ரேமண்ட் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக புதிய சம சமாஜ கட்சி அறிவித்துள்ளது.
பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

