Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதந்தை செல்வா நினைவுத் தூபியில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் அஞ்சலி

தந்தை செல்வா நினைவுத் தூபியில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் அஞ்சலி

தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் இன்றையதினம் தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார்.

இன்று காலை 9 மணியளவில் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன்இ சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் தமிழ் பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து வடக்குக் கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இரண்டு கூட்டங்களும் மாவட்டங்களிற்கு ஒரு பெரும் பொதுக்கூட்டமும் பொதுவேட்பாளர் கலந்து கொள்ளும் கூட்டமாக இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments