Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதினேஷ் குணவர்தன தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி

தினேஷ் குணவர்தன தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பாராளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைவர் பதவியைபிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (20) காலை கொழும்பு டெம்பிள் ஹவுஸில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது.

புதிய கூட்டணியின் நிர்வாகிகள்இ நிர்வாக சபை மற்றும் பிற கட்சிகளின் நிர்வாகிகளை ஈடுபடுத்துவது குறித்து இதன்போது நீண்ட விவாதம் நடந்துள்ளது.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வரும் பொது மக்கள் முன்னணியின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கும் இந்த புதிய கூட்டணி திறக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments