Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமீன்பிடி துறைமுகத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகுகள்

மீன்பிடி துறைமுகத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகுகள்

குடுவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பல நாள்
மீன்பிடி படகுகள் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

இன்று (21) காலை 7.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மற்ற மீன்பிடி படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மீன்பிடி படகுகள் குடுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ஜயவீர என்பவருடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் தங்காலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments