சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (16) சிரமதானம்
முன்னெடுக்கப்பட்டது.
இதனை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினர் ஒழுங்கு
செய்திருந்தனர்.
இவ் சிரமதானப் பணியில் மாவீரர்களின் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள் ,
பொதுமக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இம்முறை மாவீரர் தினத்தை எந்தவித பிரச்சினைகளும் இடம் பெறாத வகையில்
சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவீரர் நாள்
ஏற்பாட்டுக் குழுவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

