தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கொழும்பின் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் வெகுவாக களைகட்டி இருந்தது.
பெருமளவான மக்கள் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பொங்கல் பானைகளையும், கரும்புகள் மற்றும் தோரணம் செய்வதற்குரிய தென்னோலை, மாவிலையோடு, விறகுக் கட்டுக்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதன்போது, கடந்த வருடத்தை விட குறிப்பிட்ட அளவான வியாபாரம் கூடி உள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.
தமிழர்களுக்குரிய திருநாளாகிய தைப்பொங்கலை நாங்கள் மிகவும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடி வருகின்றோம்.கொழும்பை பொருத்தமட்டில் கரும்பு, பானை மற்றும் தோரணங்கள் போன்றவை பெற்றுக்
கொள்வதில் பெரும் சிரமம் உள்ளது.
ஆகவே நாங்கள் வியாபாரிகளிடம் இருந்து அவற்றை பெற்றுக் கொள்வதில் சந்தோஷம் அடைகின்றோம் என்றனர்

